சூரிய மின்சக்தி திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

Date:

அவுஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்ட நிறுவனமான யுனைடெட் சோலார் குழுமத்துடன் மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் ஈடுபடுவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“ இந்த ஒப்பந்தத்தின் மூலம், 1,500 மெகாவோல்ட் மின்கல ஆற்றல் சேமிப்புடன், 700 மெகாவோல்ட் சூரிய மின்சக்தி திட்டத்தில் முதலீடு செய்யப்படும்.

1,727 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு முதலீட்டில் கிளிநொச்சி, பூநகரி குளத்தின் மேற்பரப்பில் சூரிய மின்சக்தித் திட்டம் நிறுவப்படவுள்ளது.“ என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்குப் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை...

பேராதனைப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் 10ம் திகதி முதல் வழமைக்கு

சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து...

சிறைச்சாலைகளில் போதைப்பொருள் பிரச்சினை: அமைச்சர் விஜேபால

சிறைச்சாலைகளில் நேற்றிரவு முதல் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொதுமக்கள்...

நீர்கொழும்பு பல்லன்சேன சிறையிலும் பதற்றமான சூழ்நிலை!

நீர்கொழும்பு, பல்லன்சேன சிறையிலும்  பதற்றமான சூழ்நிலை நிலவுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு...