நத்தாரைக் கொண்டாட பணம் இல்லை; உயிரை மாய்க்க முயன்ற 5 பிள்ளைகளின் தந்தை

Date:

நத்தாரைக்  கொண்டாட பணம் இல்லாததால் குடும்பஸ்தர் ஒருவர்  தனது உயிரை மாய்க்க முயற்சி செய்த  சம்பவம்  மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர்  நேற்றிரவு 11 மணியளவில்  கல்லடி பாலத்தில் இருந்து  குதித்துள்ள நிலையில் பொதுமக்களால்  காப்பாற்றப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த 42 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையான இவர் மேசன் தொழில் செய்து வந்துள்ள நிலையில் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக கட்டடத்தொழில் இல்லாமல்  பொருளாதார ரீதியில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்துள்ளார்.

இந்நிலையில் பிள்ளைகளுக்கு ஆடை வாங்கி கொடுக்க முடியாத நிலை மற்றும் மனைவியின் நச்சரிப்பு போன்ற காரணங்களால் மனக்கவலையடைந்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.

இந்நிலையில் தற்கொலைக்கு முயற்சி செய்த குற்றச் சாட்டில் குறித்த நபரைக் கைதுசெய்த பொலிஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

“பாபர் மசூதி இடிப்பு பற்றி கருத்து தெரிவிப்பது தேசவிரோதமல்ல”: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்டிருக்கக் கூடாது என்ற கருத்தை வெளிப்படுத்துவதை...

ஹட்டன் கல்வி வலய பாடசாலைகள் நாளைமுதல் வழமைக்கு!

மோசமான வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த ஹட்டன் கல்வி மண்டலத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும்...

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது!

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (05) லஞ்ச...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

2026 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து விதமான...