2024 ஆம் வருட புத்தாண்டை முன்னிட்டு நாளை (டிசம்பர் 31) கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளன.
இதன்படி, கொழும்பிலுள்ள காலி வீதியின் ஒரு பகுதி, ஜனாதிபதி மாவத்தை, இலங்கை வங்கி, லோட்டஸ் வீதி, நவம் வீதி உள்ளிட்ட பல வீதிகள் நாளை மாலை 5 மணி முதல் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படவுள்ளதாக, போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.