இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த வாகனம் மீது தாக்குதல்

Date:

மாரவில பிரதேசத்தில் இன்று இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வாகனம் மற்றுமொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, அவரது வாகனம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காரில் பயணித்தவர்கள் இராஜாங்க அமைச்சரின் ஜீப் மீது தாக்குதல் நடத்தியதுடன், காருடன் மோதியதில் சேதம் விளைவித்துள்ளனர்.

மாரவில மொதரவெல்ல தேவாலயத்திற்கு முன்பாக இன்று காலை இராஜாங்க அமைச்சர் தங்கொட்டுவைக்கு நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது வாகனம் சேதமடைவதைக் கண்டு ஆத்திரமடைந்த வர்த்தகர் ,ஜீப்பில் இருந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த ஜீப் மீது இரும்பு கம்பியால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...