களுத்துறை சிறைச்சாலை கைதி மரணம்: காரணம் கண்டறியப்படவில்லை

Date:

களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் நாகொட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சிறைச்சாலைகள் ஆணையாளரும் பேச்சாளருமான காமினி பீ.திஸாநாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இந்த கைதி நேற்று வியாழக்கிழமை (டிசம்பர் 28) காய்ச்சலுக்கான சிகிச்சையைப் பெற்றிருந்த போதிலும், அவர் மீண்டும் சுகவீனமடைந்து, பின்னர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் சிறை வைக்கப்பட்டிருந்த இவருக்கு திடீரென ஏற்பட்ட சுகயீனத்தை அடுத்து உடல் நலக்குறை ஏற்பட்டது. இதன் காரணமாக நாகொட வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இவர் உயிரிழந்துள்ள போதிலும் மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.” எனவும் காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்தார்.

கைதிகளுக்கு நோய் தொற்றுகள் ஏற்படுவதால் மாத்தறை சிறைச்சாலையில் தண்டனை அனுபவிக்கும் அனைத்து புதிய கைதிகளும் அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளதாகவும் காமினி திஸாநாயக்க கூறினார்.

களுத்துறை சிறைச்சாலையின் மற்றுமொரு கைதி கடந்த வாரம் நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்ததுடன், மாத்தறை சிறைச்சாலையில் 17 கைதிகள் மூளைக்காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் ஒருவர் சுகயீனமடைந்து உயிரிழந்துள்ளார்.

 

Popular

More like this
Related

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு 4,570 ‘Smart Boardகள்’ வழங்க நடவடிக்கை: பாராளுமன்றத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பல கல்வி நவீனமயமாக்கல் திட்டங்களின் கீழ், நாடு...

இலங்கை – கத்தார் கூட்டுத் தொழிலாளர் குழு கூட்டம்: தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்த நடவடிக்கை!

இலங்கை மற்றும் கத்தார் நாடுகளுக்கு இடையிலான கூட்டுத் தொழிலாளர் குழுவின் அண்மைய...

மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனை மீட்க அரசாங்கம் தீவிர நடவடிக்கை: பாராளுமன்றத்தில் அமைச்சர் விஜித ஹேரத் விளக்கம்!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை புலம்பெயர் தொழிலாளியான சிவராசா...

காலநிலை அதிர்வுகள் தீவிரம்; இலங்கையின் நீர் விற்பனைக்கானது அல்ல

-ரிஸா யெஹியா பொறியியலாளர். காலநிலை அதிர்வுகள் தீவிரமடைந்து கொண்டிருக்கும் நிலையில், உலகளாவிய முதலீட்டாளர்கள் நீர்வளத்தை...