சவூதி அரேபியா விரைவில் இலங்கைக்கான விமான சேவையை முன்னெடுக்கும்!

Date:

சவூதி அரேபிய ஏர்லைன்ஸ் சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் விரைவில் விமானங்களை இயக்கும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் பேசிய அமைச்சர், விமானங்களை விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சவூதி அரேபிய பொருளாதார விவகார அமைச்சர் கூட்டத்தில் உறுதியளித்தார்.

பல்வேறு நாடுகளுடனான வெற்றிகரமான கலந்துரையாடலின் பின்னரே தமது விமானங்களை இயக்காத விமான நிறுவனங்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு அமைச்சினால் முடிந்ததாக தெரிவித்தார்.

“எயார் சீனா, மலிண்டோ ஏர்வேஸ், தாய் ஏர் ஏசியா, விஸ்தாரா, ஏர் அஸ்தானா, ஸ்பைஸ்ஜெட், ஏர் சீஷெல்ஸ் மற்றும் ஏர் அரேபியா ஆகிய விமானங்களை இலங்கைக்கு இயக்க முடிந்தது,” என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்..

Popular

More like this
Related

பெய்து வரும் கனமழையால் கிரகரி வாவியின் நீர்மட்டம் உயர்வு!

நுவரெலியா பகுதியில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக கிரகரி வாவியின் (Gregory...

அரச ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளுக்கு தீர்வு காண நடவடிக்கை – பிரதமர்!

அரச அதிகாரிகள் மற்றும் ஓய்வூதியர்களின் ஊதிய மற்றும் ஓய்வூதியக் கொள்கையை நிலையான...

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

களு கங்கையின் குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய...

டிரம்ப்பிற்கு பலத்த அடி! சிஎன்என் உள்ளிட்ட ஊடகங்களின் தடையை நீக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சிஎன்என் (CNN), எம்.எஸ் நவ் (MS...