ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை புனிதர்களாக திருநிலைப்படுத்தப்படுத்த தீர்மானம்: பேராயர்

Date:

ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்ட அனைவரையும் புனிதர்களாக திருநிலைப்படுத்த அவர்களின் பெயர்களை முன்மொழிய தீர்மானித்துள்ளதாக கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கந்தானை புனித செபஸ்தியார் தேவாலயத்தில் நேற்று நடைபெற்ற ஆராதனையின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதியுடன் ஈஸ்டர் தாக்குதல் நடந்து 5 ஆண்டு நிறைவு பெறுகிறது.

இதனால், தாக்குதலில் கொல்லப்பட்ட 273 பேரின் பெயர்களை பரிசுத்த சபைக்கு சமர்ப்பித்து அவர்களை புனிதர்களாக திருநிலைப்படுத்த தீர்மானித்துள்ளோம்.

அவர்கள் நம்பிக்கையுடன் தேவாலயத்திற்குள் வந்ததன் காரணமாக தாக்குதலுக்கு உள்ளாகினர். அவர்கள் வீட்டில் இருந்திருந்தால், கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். ஈஸ்டர் திருப்பலி பூஜைக்கு வந்ததன் காரணமாக உயிர்களை தியாகம் செய்தனர்.

இவர்கள் உயிர்களை தியாகம் செய்தவர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இதனை ஏப்ரல் 21 ஆம் திகதி அறிவிக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

நாம் எவருக்கும் பயப்பட தேவையில்லை.நமக்கு நாமே பயப்பட வேண்டும் எனவும் பேராயர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு:’காஞ்சிபானி இம்ரானின்’ நெருங்கிய உறவினர் சுட்டுக்கொலை

கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், பாதாள உலகக்...

ஜம்இய்யதுல் உலமாவின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக அஷ்ஷெய்க் வை.எல்.எம். நவவி நியமனம்

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக அஷ்ஷெய்க் வை.எல்.எம்....

கஞ்சிப்பானி இம்ரானின் சகாக்கள் இன்று நாட்டிற்கு

மலேசியாவில் கைதுசெய்யப்பட்ட பிரபல பாதாள குழு செயற்பாட்டாளர்களாக கருதப்படும் மூவர் இன்று...