கொழும்பில் வசிக்கும் ஒருவரின் மாதாந்த செலவு எவ்வளவு தெரியுமா?: தொகை மதிப்பு, புள்ளிவிபரத் திணைக்களம்

Date:

2023 நவம்பர் மாதத்துக்கான மாதாந்திர வறுமைக்கோடு அட்டவணையினை தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, குறித்த மாதத்தில் இலங்கையில் வாழும் ஒருவர் தனது குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளை தேசிய ரீதியாக செய்வதற்கு தேவைப்படும் தொகை 16,302 ரூபாவென அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை தேசிய அளவில் கடந்த 2023 ஒக்டோபர் மாதம் 16,112 ரூபாவாக பதிவாகியிருந்தது.

குறித்த அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் படி மாவட்ட ரீதியில் கொழும்பில் வசிக்கும் ஒருவர், ஒரு மாதத்தில் தமது குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதிகளவு செலவு செய்ய வேண்டியுள்ளது.

அதன்படி, அந்த தொகை 17,582 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மொனராகலை மாவட்டத்தில் வசிக்கும் ஒருவருக்கு குறைந்தபட்ச தேவைகளை பூர்த்தி செய்ய 15,587 ரூபா தேவை என்ற நிலை உள்ளது.

இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒருவருக்கு குறைந்தபட்ச அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கான குறைந்த செலவு கொண்ட மாவட்டமாக மொனராகலை பதிவாகியுள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...