சனத் நிஷாந்தவுக்குப் பதிலாக ஜகத் பிரியங்கர!

Date:

சனத் நிஷாந்தவின் மரணத்தை தொடர்ந்து ஏற்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு ஜகத் பிரியங்கர நியமிக்கப்பட்டுள்ளார்.

2020 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன புத்தளம் மாவட்டத்தில் 5 ஆசனங்களை பெற்றுக்கொண்டது. இதில் சனத் நிஷாந்த 80,082 வாக்குகளைப் பெற்று மாவட்டத்தில் முதல் இடத்தை பிடித்தார்.

ஏனைய நான்கு ஆசனங்களை பிரியங்கர ஜயரத்ன, அருந்திக பெர்னாண்டோ, அமல் மாயாதுன்ன மற்றும் அசோக பிரியந்த ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இந்த பட்டியலில் ஜகத் பிரியங்கர 40,527 வாக்குகளை பெற்று ஆறாவது இடத்தை பெற்றார்.

இதன்படி, சனத் நிஷாந்தவின் மறைவுக்கு பின்னர் வெற்றிடமான சபை உறுப்பினர் பதவி ஜகத் பிரியங்கரவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று (30) வெளியிடப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...