ஹமாஸின் முக்கிய தலைவர் கொலை: உச்சம் தொடும் போர் பதற்றம்

Date:

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நிகழ்ந்த டிரோன் தாக்குதலில், ஹமாஸ் குழுவின் துணை தலைவர் சலே அல் அரூரி கொல்லப்பட்டதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஹமாஸ் குழுவின் நிறுவனர்களில் ஒருவரான சலே அல் அரூரி, மேற்குக் கரையில் உள்ள குழுவிற்கு தலைமை தாங்கி வந்தார்.

இந்நிலையில், நேற்று பெய்ரூட்டில் இஸ்ரேலிய டிரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில், ஹமாஸ் குழுவின் துணை தலைவர் சலே அல் அரூரி மற்றும் மூன்று பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக, இஸ்ரேலிய அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்ட நிலையில், இந்தத் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் இருந்தால், அது மத்திய கிழக்கு மோதலை பெரிதுப்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், சலே அல் அரூரி மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, பலஸ்தீனத்தின் ரமல்லாவில் ஹமாஸ் அமைப்பினர் மற்றும் ஆதரவாளர்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரூரி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கக் கோரி கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பலஸ்தீனத்தின் அதிபர் மஹ்மோத் அப்பாஸ் உடன் நல்லுறவு கொண்டிருந்த அரூரி, போட்டி குழுக்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்க முயன்று வந்தார்.

இதனிடையே, லெபனானில் உள்ள பலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் குறிவைத்தால் பதிலடி கொடுக்கப்படும் ஹிஸ்புல்லா தலைவர் சையத் ஹசன் நஸ்ரல்லா உறுதியளித்துள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...