ஹமாஸ் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 24 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு: மிகவும் மோசமான தாக்குதல்: இஸ்ரேல்

Date:

மத்திய காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவத்தினர் மீது ஹமாஸ் குழுவைச் சேர்ந்தவர்கள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இந்தத் தாக்குதலில் 24 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இஸ்ரேல் பாதுகாப்பு படை காசா நகர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போருக்கும் இன்னும் முடிவு காணப்படவில்லை.

இந்நிலையில், மத்திய காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் வெடிபொருள்களை தயார் செய்துகொண்டிருந்த போது, ஹமாஸ் குழுவைச் சேர்ந்தவர்கள், அவர்கள் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இந்தத் தாக்குதலில் 24 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த 3 மாதமாக நடந்துவரும் போரில், இது மிகவும் மோசமான தாக்குதல் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

24 இஸ்ரேல் ராணுவத்தினர் கொல்லப்பட்ட பின்னர் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு “போர் தொடங்கியதில் இருந்து, இந்த நாள் மிக கடினமான நாட்களில் ஒன்று. முழுமையான வெற்றி கிடைக்கும் வரை நாங்கள் போராடுவதை நிறுத்த மாட்டோம்” என்று கூறியுள்ளார்.

ஆக்கிரமிக்கப்பட்ட வெஸ்ட் பேங்க் பகுதியில் இரவோடு இரவாக இருபதுக்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் அக்டோபர் 7 முதல் கைது செய்யப்பட்ட பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 6,220 ஆக உயர்ந்துள்ளது. அக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் 25,490 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 63,000 பேர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,139 ஆக உள்ளது.

Popular

More like this
Related

வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளுக்கு நீர் வெட்டு !

அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளில் இன்று...

ஹிரோஷிமா தினம்: மனித வரலாற்றின் ஆறாத வடுவும் அணுஆயுதங்களற்ற உலகத்திற்கான குரலும்

இரண்டாம் உலகப் போரின் உச்சக்கட்டம். 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி,...

பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை விடுமுறை: கல்வி அமைச்சு!

2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ்...

கொழும்பில் சர்வதேச பட்டத் திருவிழா 2026!

கொழும்பில் எதிர்வரும் ஓகஸ்ட் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள...