அதிகாரிகளால் பொறுப்பேற்கப்படாத மருந்துகள் பாதுகாப்பற்ற நிலையில்..!

Date:

பல மில்லியன் டொலர் செலவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் பாதுகாப்பற்ற நிலையில் கொள்கலன் முனையங்களில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்திய மற்றும் சிவில் உரிமைகளை வைத்தியர் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சிவ தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவின் வினைத்திறன் இன்மையினால் இந்த நிலைமை மோசமாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச மருந்தக கூட்டுத்தாபனத்தினால் கடந்த செப்டெம்பர் மாதம் வெளிநாட்டு நிறுவனங்கள் ஊடாக இந்த மருந்துகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

தற்போது வெலிசர, வத்தளை மற்றும் களனி பிரதேசங்களில் உள்ள கொள்கலன் முனையங்களில் இந்த மருந்துகள் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மெரோபெனம் (Merapenum) போன்ற பலமான நுண்ணுயிர் எதிர்ப்பிகள் உட்பட பெருமளவான மருந்துகள் இங்கு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையிடம் சுகாதார அமைச்சு வினவியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, கொள்கலன் முனையங்களில் பாதுகாப்பற்ற முறையில் மருந்துகளை களஞ்சியப்படுத்துவது குறித்து தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை விசாரணை நடத்திவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...