இலங்கையில் அதிகரித்துள்ள மார்பக புற்றுநோய் விகிதம்!

Date:

நாட்டில் கடந்த வருடத்தில் 39ஆயிரத்து 115 புற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் நான்கில் ஒரு பங்கான பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிப்படைந்துள்ளனர்.

அதற்கமைய, வருடத்துக்கு அண்ணளவாக 27சதவீதமான பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.

அண்மைக்காலமாக நாட்டில் மார்பக புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேவேளை, கடந்த வருடம் அடையாளம் காணப்பட்ட தரவுகளுக்கமைய நாளாந்தம் 103 புற்று நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.

பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம், 2019ஆம் ஆண்டு 15ஆயிரத்து 598 பேர் இந்நோயினால் உயிரிழந்திருக்கிறார்கள். அவ்வாறெனில், நாளொன்றுக்கு புற்றுநோயினால் 42பேர் உயிரிழக்கின்றனர்.

இந்த எண்ணிக்கைகள் மிகவும் உயர்ந்த மட்டத்தை வெளிப்படுத்துவதாக சுகாதார அமைச்சின் புற்றுநோய் தடுப்பு வேலைத்திட்டத்தின் விசேட வைத்திய நிபுணர் சுராஜ் பெரேரா தெரிவித்தார்.

Popular

More like this
Related

Online விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...