புத்தளம் பாத்திமா அஹதிய்யா பாடசாலையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு!

Date:

புத்தளம் பாத்திமா அஹதிய்யா பாடசாலையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்றது.

பாத்திமா அஹதிய்யா பாடசாலைக்கு 300 மாணவர்கள் மும்மொழிகளிலும் முதற் கட்டமாக அனுமதிக்கப்பட்டனர்.

புத்தளம் மாவட்ட அஹதிய்யா பாடசாலைகளின் சம்மேளனத்தின் வழிகாட்டலின் பிரகாரம் பாத்திமா அஹதிய்யா பாடசாலையின் அதிபர் எம்.ரீ.மபாஹிரா மற்றும் அஹதிய்யா பாடசாலை முகாமைத்துவக் குழுவினர், சிறந்த கல்வியியலாளர்களைக் கொண்ட முஅல்லிமாக்கள் ஆகியோரின் அயராத முயற்சியின் விளைவாகவும் பெற்றோரது முழுமையான பங்களிப்புடனும் ஆரம்பமான பாத்திமா அஹதிய்யாவில் அழகான சீருடையுடன் மாணவர்களின் வருகையும் அமைந்திருந்தது .

காலைக் கூட்டத்தில் விஷேட வளவாளர்களின் சொற்பொழிவுகள் மற்றும் உடற்பயிற்சி என்பன நிறைவடைந்த பின்னர் ஆசிரியர் குழாம் இனிப்புப் பண்டங்களை வழங்கி மாணவர்களை வரவேற்றமை விஷேட அம்சமாகும்.

தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் கல்வி பயில மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் பாத்திமா அஹதிய்யா பாடசாலையின் தலைவி ஸரீனா பர்வீன், அகில இலங்கை அஹதிய்யா பாடசாலைகளின் மத்திய சம்மேளனத்தின் தேசிய பிரதித் தலைவர் பாரூக் பதீன், புத்தளம் மாவட்ட அஹதிய்யா பாடசாலைகளின் சம்மேளனத்தின் பொருளாளர் ஏ.ரீ.தாஹிரா தஸ்னீம், அஹதிய்யா பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் முகாமைத்துவ குழுவினர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

(எம்.யூ.எம்.சனூன்)

Popular

More like this
Related

இஸ்ரேலில் உணவகம் (Restaurant) மற்றும் கட்டிடப் புனரமைப்பு (Renovation) ஆகிய துறைகளுக்கான...

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

வளைகுடாப் பிராந்தியத்தில் போர்ச் சூழலும் பதற்றமும் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான்,...

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்!

மேல்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையில்...

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்குப் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை...