சுதந்திரமான தேசத்தில் சுதந்திர பிரஜைகளாக வாழ்வதற்கு பொருளாதார சுதந்திரம் இன்றியமையாததாகும்.
அதற்கமைய இன்று 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அல்ஹிமா சமூக சேவை நிறுவனத்தின் ஆதரவில் குவைத்திலுள்ள நமா சமூக சேவை நிறுவனத்தின் உதவியோடு வவுனியா வாழவைத்த குளம் பகுதியில் அமைந்துள்ள அல் பழாலா கல்வி நிறுவன வளாகத்தில் சுயதொழில் செய்வோருக்கான உதவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது வடமாகாணத்தில் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மன்னார் ஆகிய பகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 5 குடும்பங்களுக்கான சுயதொழில் செய்வதற்கான உணவு வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வை அல்ஹிமா சமூக சேவை நிறுவனத்தின் தலைவரும் பிரபல சமூக சேவையாளருமான அஷ்ஷெய்க் எம்.ஏ.எம் நூருல்லா அவர்கள் கலந்துகொண்டு வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.