கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் படுகாயம்!

Date:

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் சிப்பாய் ஒருவர் உட்பட பல கைதிகள் காயமடைந்துள்ளனர்.

இந்த மோதலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும், கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் சமையல் அறைகள் மற்றும் பல இடங்களில் கைதிகள் சேதம் விளைவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட இரும்பு கம்பிகள் மற்றும் கம்பங்கள், மோதலை ஏற்படுத்த பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கம்புகள் மற்றும் போதைப்பொருள் கையிருப்பு போன்றவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக வெலிகந்த பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...