வக்பு சொத்துக்களை பாதுகாப்பதற்கான சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு! (படங்கள்)

Date:

அண்மைக்காலமாக இலங்கை முஸ்லிம்களின் வக்பு சொத்துக்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிக்கு எதிராக பலதரப்புக்களையும் சேர்ந்தவர்கள் குரல்கொடுத்து வருகின்றார்கள்.

அதற்கமைய வக்பு சொத்துக்களை பாதுகாப்பதற்கான சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று விசேட ஊடக சந்திப்பொன்று தெஹிவளையில் உள்ள ஜயசிங்க மண்டபத்தில் இடம்பெற்றது.
பொதுச்சொத்துக்களை பாதுகாப்பதற்கான தேவை கருதி ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஊடக சந்திப்பில் அநீதிக்குள்ளாக்கப்பட்டுள்ள பிரபல கபூரிய்யா அரபுக்கல்லூரி,பாபக்கர் மஸ்ஜித்,, கொள்ளுப்பிட்டி மஸ்ஜித், ராஜகிரிய தாருல் இமான் மஸ்ஜித்களின் வக்பு சொத்துக்கள் பற்றின பிரச்சினைகள் பிரஸ்தாபிக்கப்பட்டன.

மேலும், வக்ஃப் சட்டத்தில் திருத்தம் தொடர்பிலும் கருத்து தெரிவிக்கப்பட்டது,
இந்த ஊடகசந்திப்பில் தில்சான் கபூரி, ஹனான் கபூரி,எம் முபாரக், எம்.எச்.எம், லேசில் டி சில்வா, ரஃபியுதீன் சலஃபி, எம் இக்பால் ஹாஜி,சஹீம் நசூர்தீன், எம்.எஸ் ஹில்மி ஆகியோர் உட்பட மற்றும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Popular

More like this
Related

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை!

பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்...