இரண்டு மடங்காக அதிகரித்த தேங்காய் விலை!

Date:

தேங்காயின் வழமையான விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ருக்ஷான் ஹர்ஷன ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

தேங்காய் தற்போது ரூ.120 முதல் 150 ரூ. வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதனால், தேங்காயின் விலை உயர்வானது எதிர்காலத்தில் பொதி செய்யப்பட்ட உணவுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என உணவுத் தொழில்துறை தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலான கறிகள் தேங்காய் பாலினை கொண்டு தயாரிக்கப்படுவதால் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளனர்.

அதிகரித்துள்ள தேங்காய் விலையினால் உணவு பொதிகளை தயார் செய்ய முடியாமல் சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும், இதனால் உணவுப் பொதிகளை அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய சூழ்நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரிசி, கோழியிறைச்சி, முட்டை, எரிவாயு உள்ளிட்ட அனைத்தும் கணிசமாக உயர்ந்துள்ள நிலையில் தேங்காய்களின் எதிர்பாராத விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
தேங்காய்களின் திடீர் அதிகரிப்பு காரணமாக எதிர்வரும் நாட்களில் தேங்காய் எண்ணெயின் விலையும் உயரும் என அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...