வீசா இன்றி சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க குவைத் தீர்மானம்!

Date:

குவைத்தில் வதிவிட வீசா காலத்தை மீறி நாட்டில் தங்கியிருந்து பணியிடங்களை விட்டு வெளியேறிய இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க குவைத் அமைச்சர் எமிர் ஷேக் மெஷல் அல் அஹமட் அல் ஜாபர் தீர்மானித்துள்ளார்.

குவைத் எமிர் ஷேக் மெஷால் அல்-அஹமட் அல்-ஜாபர் மற்றும் குவைத்துக்கான இலங்கைத் தூதுவர் காண்டீபன் பாலசுப்ரமணியம் அறிக்கை ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு அபராதம் அல்லது சட்டத் தடைகள் எதுவும் செலுத்தாமல் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது

இந்த பொதுமன்னிப்பு காலம் கடந்த 17 ஆம் திகதி முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் எனவும் அவர்கள் கூறியுள்ளார்கள்.

தற்போது குவைத்தில் வீசா இன்றி சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை 19,620 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் சுமார் 5,000 இலங்கையர்கள் தற்போது இலங்கைக்கு திரும்புவதற்காக தூதரகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தூதுவர் தெரிவித்தார்

எவ்வாறாயினும் இந்த பொதுமன்னிப்புக் காலத்திற்கு அப்பால் அவர்கள் இலங்கைக்கு வந்தால், கைது செய்யப்பட்டு, கைரேகை பதிவு செய்யப்பட்டு, 650,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...