யாசகத்தில் ஈடுபடும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Date:

கதிர்காமம் புனித பூமியில் யாசகத்தில் ஈடுபடும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுத்த போதிலும் அவர்களது பெற்றோர்கள் பிள்ளைகளை மீண்டும் யாசகத்தில் ஈடுபடுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா  அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கதிர்காமம், செல்ல கதிர்காமம், கிரிவிகாரை ஆகிய பகுதிகளில் இந்த சிறுவர்கள் தனியாகவும் பெற்றோருடனும் யாசகத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

5, 10, 16 வயதுக்குட்பட்ட பல சிறுவர்கள் பெற்றோருக்குத் தெரிந்தே யாசகத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலான சிறுவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சிறுவர்கள் பல தடவைகள் திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 

Popular

More like this
Related

‘குர்ஆனின் வழியில் கருணை காட்டுங்கள்’; அனோஜனின் மரண தண்டனைக்கு எதிராக அலி சப்ரி குரல்

நபிகள் நாயகத்தின் கண்ணியத்தைப் பாதுகாப்பதைப் பற்றி பேசும் போதெல்லாம், அவரது கருணை,...

இரட்டையையாளர்களான மருத்துவத் துறை மாணிவிகள் இருவருக்கு ஐபேட் வழங்கி வைப்பு.

உலக முஸ்லிம் சமேலனம் (ராபிதத்துல் ஆலமில் இஸ்லாமி) – இலங்கை அலுவலகத்தின்...

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்கான தீவிர முயற்சி!

சவூதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்டனை...

அனோஜன் வழக்கை உன்னிப்பாக அவதானிக்கும் இலங்கை அரசு!

சவூதி அரேபியாவில் தற்போது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான அனோஜன்...