குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான மைத்திரிபால சிறிசேன!

Date:

வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து கடந்த 22ஆம் திகதி மைத்திரிபால சிறிசேன வௌியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம்(CID) நேற்று அழைப்பு விடுத்தது.

இந்நிலையில் அவர் இன்று (25) வாக்குமூலம் வழங்கவுள்ளதாக மைத்திரிபால சிறிசேனவை மேற்கோள்காட்டி பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்திருந்தார்.

அத்துடன், அவரை கைது செய்து உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பல்வேறு அரசியல் தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

“இதுவரை காலம் உண்மை வெளிகொணரப்படாமைக்கான காரணம் என்ன”? என்று கேள்வி எழுப்பட்ட நிலையில் மூன்று வாரங்களுக்கு முன்னர் கிடைத்த தகவலுக்கமையவே இந்த தகவலை அறிவித்ததாக மைத்திரிபால சிறிசேன ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

 

Popular

More like this
Related

ஜம்இய்யதுல் உலமாவின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக அஷ்ஷெய்க் வை.எல்.எம். நவவி நியமனம்

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக அஷ்ஷெய்க் வை.எல்.எம்....

கஞ்சிப்பானி இம்ரானின் சகாக்கள் இன்று நாட்டிற்கு

மலேசியாவில் கைதுசெய்யப்பட்ட பிரபல பாதாள குழு செயற்பாட்டாளர்களாக கருதப்படும் மூவர் இன்று...

சாகர காரியவசம் குற்ற விசாரணைப் பிரிவால் கைது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளரான சட்டத்தரணி சாகர காரியவசம்...