இலங்கை வருகிறார் ஈரான் ஜனாதிபதி!

Date:

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இம்மாதம் 24ஆம் திகதி இலங்கை வரவுள்ளார்.

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் இம்மாதம் 24 ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

இந்த திட்டத்தை திறந்து வைப்பதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நீர்ப்பாசன மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது.

இஸ்ரேல் மீது ஈரான் கடந்த சனிக்கிழைமை (13) வான் வழித்தாக்குதலை நடத்திய நிலையில், பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றநிலைக்கு மத்தியில் ஈரான் ஜனாதிபதியின் விஜயம் அமையவிருக்கின்றது.

Popular

More like this
Related

1,546 மில்லியன் ரூபா செலவில் ஒருகொடவத்தை – அம்பதலே பாலங்கள் நிர்மாணம்!

கொழும்பு நகரத்திற்குள் பிரவேசிக்கும் பிரதான வீதிகளில் ஒன்றான ஒருகொடவத்தை – அம்பதலே...

நாட்டில் டெங்கு மரணங்கள் 68 ஆக உயர்வு!

நடப்பு ஆண்டில் நேற்று (12) வரையிலான காலப்பகுதியில் நாட்டில் பதிவான டெங்கு...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும்...

இஸ்ரேலின் தொடர் குண்டுவீச்சு: காசாவில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் நரம்பு மண்டலத்திற்குப் பெரும் அச்சுறுத்தல்!

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் மற்றும்...