ஈஸ்டர் தாக்குதல்;நீதி கிடைக்க வேண்டுமென பேராயர் கடும் தொனியில் எச்சரிக்கை

Date:

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று தற்கொலைத் தாக்குதல் திகதி ஞாயிற்றுக்கிழமை ஐந்து வருடங்கள் நிறைவடைந்துள்ளன.

இதனை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.45 இற்கு  உள்ள அனைத்து கிறிஸ்த்தவ தேவாலயங்களிலும் இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டது.

பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மற்றும் அனைத்து மதத் தலைவர்கள் மற்றும் தூதர்களின் பங்கேற்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.

உரிய விசாரணை நடத்தப்பட்டு நீதி கிடைக்க வேண்டுமென பேராயர் கடும் தொனியில்   அரசியல் தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடுமையான தாக்குதலுக்கு உள்ளான நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் உதவி ஆயர்கள் தலைமையில் ஆராதனை நிகழ்வும் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை இதுவரை நீதி பெற்றுக்கொடுக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் முன்னெக்கப்பட்டது.

கொழும்பு- கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக நேற்று சனிக்கிழமை பிற்பகல் (20) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பொதுமக்களிடம் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.

, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திலிருந்து நேற்று சனிக்கிழமை பிற்பகல் பேரணியொன்று ஆரம்பமானது.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனைகளின் பின்னர் இந்த பேரணி ஆரம்பமானது.

கொச்சிக்கடை தேவாலயத்தில் ஆரம்மான பேரணி மோதர , வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க , நீர்கொழும்பு ஊடாக புனித செபஸ்டியன் தேவாலயம் வரை செல்லவுள்ளது.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு வழங்கப்படவில்லையென கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு மறைமாவட்ட பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ கேள்வியெழுப்பட்டிருந்தது.

தமக்கு வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் தம்மால் முடிந்த அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாக அவர் பதிலளித்திருந்தார்.

 

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...