மாலைத்தீவில் இன்று நாடாளுமன்ற தேர்தல்: உற்றுநோக்கும் இந்தியா

Date:

மாலைத்தீவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) ஆரம்பமாகின.

மாலைத்தீவில்  93 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு மொத்தம் 368 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 17 ஆம் திகதி தேர்தலை நடாத்துவதற்கு அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் திகதியில் மாற்றம் செய்யப்பட்டது.

தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

சட்டமூலத்திற்கு மாலைத்தீவு ஜனாதிபதி முகமது மூயிஸ் அனுமதியளித்தையடுத்து இன்று தேர்தலை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்து.

சீன ஆதரவாளர் என கூறப்படும் தற்போதைய மாலைத்தீவு ஜனாதிபதியான முகமது மூயிஸ் இந்தியாவுடன் சுமுகமான உறவை கொண்டிராதவர்.

“தான் ஆட்சிக்கு வந்தால் மாலைத்தீவில் இருந்து இந்திய இராணுவ வீரர்களை விரட்டியடிப்பேன்” என தேர்தல் பிரச்சாரங்களிலும் அவர் கூறியிருக்கின்றார்.

இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த தேர்தல் அவரது செல்வாக்கை நிரூபிப்பதற்கான முக்கிய சோதனையாக பார்க்கப்படுகிறது.

மாலைத்தீவு புவிசார் அரசியலில் முக்கியமான இடத்தில் இருக்கிறது. முய்சு அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் இந்தியாவுக்கு எதிராகப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

மாலைத்தீவுக்கு உதவ அங்கிருந்த இந்தியா ராணுவத்தினரையும் வெளியேற உத்தரவிட்டார். அதேநேரம் மறுபுறம் அங்கே சீனாவின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது.

மாலைத்தீவில் உள்ள பல முக்கிய திட்டங்களில் சீனா மிகப் பெரியளவில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளன. இதனால் மாலைத்தீவு தேர்தல் ரொம்பவே முக்கியமாக மாறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இதுவரை 103  காட்டு யானைகள் புகையிரதங்களில் மோதி உயிரிழந்துள்ளன

2015 ஆம் ஆண்டு முதல்  இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம்  103  காட்டு...

அமானா வங்கியின் சித்தீக் அக்பர், AAFI இன் தலைவராக நியமனம்

அமானா வங்கியின் நுகர்வோர் வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தல் உப தலைவர் சித்தீக்...

ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கோடியே எழுபது இலட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி!

2024ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதித் தேர்தலில் சுமார் ஒரு கோடியே எழுபது இலட்சம்...

இன்று இரவு கடும் மின்னல் தாக்கம் ஏற்படும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (09) கடும் மின்னல் தாக்கம் ஏற்படும்...