‘அரபிகளிடம் எதையும் கேட்காதீர்கள்’ தனது கணவனின் உடலின் மீது கை வைத்து கதறி அழுத ஹானியாவின் மருமகள்:லத்தீப் பாரூக்

Date:

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு பதற்ற நிலை அதிகரித்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோசமான ஒரு மோதல் இடம்பெறலாம் என எதிர்ப்பார்க்கப்படும் பின்னணியில், 2024 ஏப்பிரல் 10ம் திகதி புதன் கிழமை நோன்புப் பெருநாள் தினத்தன்று, மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இஸ்ரேலின் மரண மற்றும் அழிவு மழையில் சிக்கியுள்ள பலஸ்தீன மக்களும் இருப்பதைக் கொண்டு பெருநாளைக் கழித்தனர்.

அன்றைய தினம் காஸாவின் ஷாதி அகதி முகாம் பிரதேசத்தில் பெருநாள் மரபுகளின் படி தமது எஞ்சியுள்ள உறவுகளை சந்திப்பதற்காக சென்ற ஹமாஸ் இயத்தின் தலைவர் இஸ்மாயில் ஹானியாவின் மூன்று புதல்வர்களும் அவர்களின் மூன்று பிள்ளைகளும்; (ஹானியாவின் பேரப்பிள்ளைகள்) பயணம் செய்த வாகனத்தின் மீது இஸ்ரேல் கட்டவிழத்து விட்ட காட்டுமிராண்டித் தனத்தில் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

அல்ஜஸீரா வெளியிட்டுள்ள தகவல்களின் படி இவர்கள் ஆறு பேரும் பயணம் செய்த
வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் எல்லோரும் கொல்லப்பட்டனர். ஆளில்லா விமானம் ஒன்றில் இருந்து ஏவப்பட்ட ஏவுகனை மூலம் இவர்கள் பயணம் செய்த கார் நேரடியாக இலக்கு வைத்து தாக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் மற்றொருவர் காணமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

முஹம்மத் ஹானியா, ஹாஸெம் ஹானியா, அவரது மகள் அமல், அமீர் ஹானியா அவரது மகன் காலித், மகள் றாஸான் ஆகிய ஆறுபேருமே கொல்லப்பட்டதாக பலஸ்தீனத்தின் ஷெஹாப் செய்திச் சேவை அறிவித்துள்ளது.

பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் அரசியல் பணியகத்தின் தலைவரான இஸ்மாயில் ஹானியா தற்போது கத்தாரில் தங்கி உள்ளார்.

இஸ்ரேலிய தாக்குதலால் காயம் அடைந்து கத்தாரின் தோஹா நகர ஆஸ்பத்திரியில் தற்போது சிகிச்சை பெற்று வரும் பலஸ்தீன சிறுவர்களை பார்வையிடச் சென்ற வேளையில் தான் இஸ்மாயில் ஹானியாவுக்கு இந்தத் தகவல் கிடைத்தது “எனது பிள்ளைகள் காஸாவில் மக்களோடு மக்களாக வாழ்ந்தனர். அவர்கள் அங்கிருந்து வெளியேற விரும்பவில்லை.

எங்களுடைய குடும்பத்தவர்கள் எல்லோரும், மற்றும் காஸாவில்
உள்ள குடும்பங்கள் அனைத்துமே, தமது இரத்தத்தாலும், பிள்ளைகள், உடன் பிறப்புக்கள், பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் உயிர்களாலும் பெரும் விலையை செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.

நானும் அவர்களில் ஒருவனே” என்று இந்த செய்தி கேள்விபட்டதும் ஹானியா கூறினார்.

காஸா பிரதேசத்தில் சவூதி அரேபியா, எகிப்து, ஜோர்தான் மற்றும் ஐக்கிய
அரபு இராச்சியம் என்பனவற்றின் ஒத்துழைப்போடு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும்  இஸ்ரேலிய படைகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் இன ஒழிப்பு நடவடிக்கையில் குறைந்த பட்சம் 60 குடும்ப உறுப்பினர்களை இதுவரை தான் இழந்துள்ளதாக ஹானியா மேலும் கூறினார்.

ஹமாஸ் இயக்கதின் ஒட்டு மொத்த செயற்பாடுகளுக்கும் தலைமை தாங்குபவராகக் கருதப்படும் இஸ்மாயில் ஹானியா 1980 முதல் அந்த இயத்தின் தீவிர செயற்பாட்டாளராக இருந்து வருகின்றார். 2017ல் ஹமாஸ் அரசியல் பணியகத்தின் தலைவராக அவர் தெரிவு செய்யப்பட்டார்.

இந்த செய்தி கேள்விபட்டதும் ஹானிய தெரிவித்துள்ள கருத்தக்களும் அவர் நடந்து கொண்ட விதமும் பலஸ்தீன மக்களை வசீகரித்துள்ளன.

ஒரு உண்மையான பலஸ்தீன தலைவனிடம் தாம் எதிர்ப்பார்க்கும் இயல்பு இதுதான் என அவர்கள் தெரிவித்துள்ளனர். அத்தோடு இஸ்ரேலுடன் ஒத்துழைக்கும் ஊழல் பேர்வழியான பலஸ்தீன அதிகார சபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸின் கருத்துக்கள், அவருடைய மொழி வழக்கு மற்றும் நடத்தை என்பனவற்றோடு மக்கள்
ஹானியாவை ஒப்பிட்டு பாராட்டி உள்ளனர்.

“தலைவர்களின் பிள்ளைகளை இலக்கு வைத்து கொலை செய்வதன் மூலம் எமது மக்களின் மன உறுதியை சிதைத்துவிடலாம் என்று ஆக்கிரமிப்பு சக்திகள் நம்புகின்றன.

ஆனால் சிந்தப்படும் இந்த இரத்தம் எமது கொள்கைகளில், எமது இலக்குகளில் எம்மை மேலும் திடப்படுத்தும்.

எமது தாயக பூமியோடு அது எம்மை மேலும் வலுவாக இணைக்கும்” என்பதை மட்டும் நான் கூறிக் கொள்ள விரும்புகின்றேன் என்று ஹானியா மேலும் கூறினார்.

“என்னுடைய பிள்ளைகளை கொன்றால் நாம் எமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வோம் என்று எதிரிகள் கருதினால் அது வெறும் மாயை மட்டுமே. காஸாவில் உயிர்த்தியாகம் செய்துள்ள எமது மக்களின் இரத்தத்தை விட எனது பிள்ளைகளின்; இரத்தம் ஒன்றும் விலை மதிப்பு கூடியது அல்ல.

காரணம் காஸாவில் கொல்லப்பட்ட எல்லோரும் எனது பிள்ளைகளே. பலஸ்தீனத்தின் விடுதலை பாதையில் சிந்தப்பட்டுள்ள மேலும் சில துளிகள் தான் எனது பிள்ளைகளின் இரத்தம்.

இதனால்நாம் தயக்கம்  அடையப் போவதும் இல்லை, பின்வாங்கப் போவதும் இல்லை. அல்குத்ஸ், அல்அக்ஸா என்பனவற்றின் விடுதலைக்கான எமது பயணம் மேலும் தொடரும்” என்று அமைதியாகக் கூறினார் ஹானியா.

இந்த கவலைக்குரிய நெருக்கடியான நேரத்திலும் ஹமாஸ் தனது நிபந்தனைகளை ஒருபோதும் வாபஸ் பெறாது என்பதை ஹானியா திட்டவட்டமாக வலியுறுத்தி உள்ளார்.

நிரந்தர யுத்த நிறுத்தம், பலஸ்தீன மக்கள் தமது சொந்த இடங்களுக்கு மீளத் திரும்பி வரல் என்பன இந்த நிபந்தனைகளில் பிரதானமானவை. “இந்த நிபந்தனைகளுடன் கூடிய பேச்சுவபர்த்தைகளின் உச்ச கட்டத்தில் எனது பிள்ளைகளை இலக்கு வைத்து தாக்குவதால், ஹமாஸ் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் என்று அவர்கள் (இஸ்ரேல்) நினைப்பார்களானால் அது அவர்களின் கற்பனையாக மட்டுமே இருக்கும்” என்று ஹானியா மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.

இஸ்ரேல் ஹமாஸ் மோதல்களின் போது ஹானியாவின் குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டது இது முதல் தடவை அல்ல. கடந்த பெப்ரவரி மாதத்திலும் அவரது மகன் ஒருவர் கொல்லப்பட்டார்.

கடந்த அக்டோபர் மாதத்தில் அவரது சகோதரன் மற்றும் மருமகன் ஆகியோரும்
கொல்லப்பட்டனர். நவம்பரில் மற்றொரு பேரனும் கொல்லப்பட்டார்.

ஹானியாவின் குடும்பத்தவர்கள் பயணம் செய்த தாக்குதலுக்கு உள்ளான வாகனம்
இஸ்மாயில் ஹானியா 1962ம் ஆண்டு ஷாட்டி அகதி முகாமில் பிறந்தவர்.

பலஸ்தீன மக்கள் தமது தலைவராக அவரை தெரிவு செய்தனர். ஆனால் அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் இஸ்ரேலிய கைக் கூலியான பலஸ்தீன அதிகார சபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸ், மக்கள் விருப்பத்துக்கு மாறாக 2007 முதல் ஹானியாவை பதவியில் இருந்து நீக்கிவிட்டு அந்தப் பிராந்தியத்தில் தனது
எஜமானர்களின் நிகழ்ச்சி நிரலை அமுல் செய்து வருகின்றார்.

தற்போது கொல்லப்பட்ட ஹானியாவின் மகன்களில் ஒருவரான ஹாஸெம்மின் மனைவி தனது கணவனின் கொலை பற்றி தெரிவித்துள்ள துணிச்சலான கருத்து தற்போது சமூக ஊடகங்களில் பிரபலமாகி வருகின்றது.

“அரபிகளிடம் எதற்காகவும் வேண்டுகோள் விடுக்காதீர்கள்” என்று அவர் கூறியுள்ளதாக அவரை மேற்கோள் காட்டி அல் ஜெஸீரா தெரிவித்துள்ளது.

அவர் மிகவும் உறுதியான உருக்கமான கருத்தினை தெரிவித்துள்ளார்.
“சகல உயிர் தியாகிகளுக்கும் உங்களது வாழத்துக்களை தெரிவித்துக் கொள்ளுங்கள் என்று தனது கனவர் மற்றும் பிள்ளைகளுக்கான இறுதி நிகழ்வின் போது அவர் கூறினார். “(இறைவனுடைய படைப்புக்களில்) நாங்கள் சகிப்புத்தன்மை மிக்கவர்களின் கூட்டத்தில் இருக்கின்றோம்.

நான் உங்களை இறைவனிடம் சமர்ப்பிக்கின்றேன். என்னுடைய இந்த பேரிடர் மிக்க காலத்தில் இறைவனே எனக்கு துணை நிற்கட்டும். அவர்கள் (இஸ்ரேல்) தோற்றுவிட்டார்கள்.

காரணம் ஹாஸெம் இன்னும் மரணிக்கவில்லை. அவர் இன்னமும் உயிர் வாழ்கின்றார்” என்று அவர் திடமான வார்த்தைகளில் கூறியுள்ளார்.

இந்தக் கடுமையான வார்த்தைகள் அரபுலகின் இன்றைய ஆட்சியாளாகளைப் பற்றி
கூறப்பட்டுள்ளன.

“ஆறு மாதங்களாக தனது இனஒழிப்பு தாக்குதல்கள் மூலம் காஸாவை இஸ்ரேல் வாட்டி வதைத்து வருகின்ற போதும் அவர்கள் எதுவும் செய்யாமல் அமைதியாக இருக்கின்றனர்.

இதனால் தான் அரபிகளிடம் எதையும் கேட்க வேண்டாம். அவர்களுக்கு நாங்கள் தேவை. ஆனால் எங்களுக்கு அவர்கள் தேவையில்லை. அவர்கள் தான் மரணம்
அடைந்துவிட்டார்கள்.

நாங்களும் நீங்களும்; இன்னமும் உயிருடன் தான் இருக்கின்றோம்” என்று அங்கு கூடியிருந்தவர்களை நோக்கி தனது கணவன் மற்றும் பிள்ளைகளின் உடல்களில் கைகளை வைத்தவாறு கோஷமிட்டுள்ளார் அந்த விதவை பெண்.

“அபு அம்ரே (அம்ரின் தந்தையே – அதாவது அவரது கணவர். அரபு பெண்கள் தமது கணவனை பிள்ளைகளின் பெயரை சொல்லி தந்தையே என விழிப்பது வழக்கம்) உம்மீது இறைவனின் கருணை உண்டாகட்டும்.

எனது அன்புக்குரியவரே உங்களது ஈத் (பெருநாள்) சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது” என்று கூறி தனது கூற்றை முடித்துள்ளார்.

இந்தத் தாக்குதலை கண்டிக்கும் துணிச்சல் கூட இதுவரை எந்தவொரு அரபுலக ஆட்சியாளருக்கும் வரவில்லை.

மலேஷிய பிரதம மந்திரி அன்வர் இப்றாஹிம் மட்டுமே இந்த சம்பவத்தை
வன்மையாகக் கண்டித்துள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 8ம் திகதி பலஸ்தீன பிரதேசத்தில் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி மற்றும் அரபுலக சர்வாதிகாரிகளின் ஆதரவோடு இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இன ஒழிப்பு தாக்குதல்கள் மூலம் இதுவரை 33634 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

76264 பேர் காயம் அடைந்துள்ளனர். காஸாவில் இருந்த மக்கள் குடியிருப்புக்களில் சுமார் 62 வீதம் நாசமாக்கப்பட்டுள்ளது. 290820 வீடுகள் தரை மட்டமாக்கப்பட்டுள்ளன.

பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடு வாசல்களை இழந்துள்ளனர். அங்கு வாழ்ந்த சுமார் 23 லட்சம் மக்களும் தற்போது தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி இடம் பெயர்ந்துள்ளனர்.

அங்குள்ள சில இடங்களில் பட்டினி தற்போது தவிர்கக முடியாத ஒன்றாகிவிட்டது என பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அறிக்கை ஒன்றில் கடந்த மாதம் இந்தத் தகவல் வெளியாகி உள்ளது.

ஹானியாவின் கொல்லப்பட்ட மூன்று புதல்வர்களும் அவர்களில் ஒருவரான ஹாஸெம்மின் மனைவியும் படத்தில் காணப்படுகின்றனர். ஆனால் இவற்றை வெளியில் கூற இஸ்ரேல் ஆதரவு மேற்குலக ஊடகங்களும், அவர்களுக்கு
அதரவான முஸ்லிம் நாடுகளின் ஊடகங்களும், ஹமாஸுக்கு எதிரான அரபுலக ஊடகங்களும் மறுத்து வருகின்றன.

அதிகாரத்தில் தொடர்ந்து அமர்ந்திருக்க வேண்டும் என்ற நெதன்யாஹ{வின் தீவிர ஆசை காரணமாக அவர் தற்போது தீவிர வலதுசாரி போக்குள்ள மதச்சாhபு கட்சிகள் பலவற்றோடு கூட்டணி அமைத்துள்ளார்.

அந்தக் கட்சிகளில் ஒன்று காஸாவை அணுகுண்டு போட்டு அழித்து விட வேண்டும் என்ற நோக்கம் கொண்டது.

இன்று வரை இஸ்ரேலினதும் அதன் தலைவர்களினதும் இலட்சியம், இந்தப் பிராந்தியத்துக்கும், முழு உலகுக்கும் விளைவித்துள்ள
சேதங்கள் மதிப்பிட முடியாதவை.

இந்த நூற்றாணடின் ஆரம்பத்தில் ஈராக் மீது படையெடுப்பதற்கு அமெரிக்காவை தூண்டும் வகையில் இவர்கள் வழங்கிய போலியான தகவல்களும் இன்னமும் வரலாற்று ஏடுகளில் பதியப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ரஃபாவில் மக்கள் வசிக்கும் பகுதிகள் மீது தாக்குதலை மேற்கொண்டால் இஸ்ரேலிற்கான ஆயுத விநியோகத்தை நிறுத்துவேன்: பைடன்

இஸ்ரேல்  காசா நகரமான ரஃபாமீது பாரிய தாக்குதலை மேற்கொண்டால்  இஸ்ரேலிற்கு சில...

அரசாங்க அதிகாரிகள் தொடர்பில் புதிய சுற்றறிக்கை!

கொரோனா -19 தொற்றுநோய்களின் போது வெளிநாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக பணிக்குத்...

பொருளாதார மீட்சிக்காக அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: ஜனாதிபதி

பொருளாதார மீட்சிக்காக முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என...

மாகாண மட்டத்தில் மருத்துவமனைகளில் இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கை!

தமது கோரிக்கைகளுக்கு வழங்கப்பட்ட இணக்கப்பாடுகள் நிறைவேற்றப்படாத காரணத்தினால் இன்று (09) முதல்...