இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!

Date:

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில்100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், மத்திய. சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 15 ஆம் திகதி வரை இலங்கையின் அகலக் கோடுகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

அதற்கிணங்க இன்று (13) நண்பகல் 12.10 அளவில் குமுழமுனை, முறிகண்டி, கேரிதமடு மற்றும் தண்ணீரூற்று ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல் …

அனுராதபுரம் – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.

மட்டக்களப்பு – சிறிதளவில் மழைபெய்யும்.

கொழும்பு – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

காலி – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

யாழ்ப்பாணம் – பிரதானமாக சீரானவானிலை.

கண்டி – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.

நுவரெலியா – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.

இரத்தினபுரி – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

திருகோணமலை – சிறிதளவில் மழை பெய்யும்.

மன்னார் – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.

Popular

More like this
Related

‘இலங்கையர்களாக இணைந்து நிற்கிறோம்’; அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூதி அரசிற்கு சனத் ஜெயசூரிய கோரிக்கை!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையர் சிவராசா அனோஜனுக்கு மனிதநேய...

சவூதியிலுள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர எச்சரிக்கை!

யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களுக்கு மத்தியில் சவூதி அரேபியாவில் தங்கியிருக்கும் இலங்கையர்கள்,...

அனோஜன் வழக்கு: சவூதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் தயார்; இலங்கை சட்டக் குழு தீவிரம்!

முகநூல் (Facebook) பதிவு ஒன்றின் மூலம் மத அவமதிப்புச் செய்ததாகக் குற்றம்...

வெறுப்புணர்வுக்கு அங்கீகாரம்; நவி பிள்ளைக்கு நோபல் பரிசு அறிவிப்பிற்கு இஸ்ரேல் கடும் கண்டனம்!

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைகள் ஆர்வலரும் முன்னாள் சர்வதேச நீதிமன்ற நீதிபதியுமான...