அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தூதுக்குழுவினர் ஓமான் நாட்டுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம்

Date:

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முஃப்தி  அவர்களின் தலைமையில் ஒரு தூதுக்குழுவினர் கடந்த 21 ஆம் திகதி ஒமான் நாட்டுக்கான குறுகிய கால விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

இக்குழுவில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உதவித் தலைவர்களில் ஒருவரான அஷ்ஷெய்க் ஏ. எல். எம். கலீல், ஆலிம்கள் விவகாரப் பிரிவின் செயலாளர் அஷ்ஷெய்க்  எஸ். எல். எம். நவ்பர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஒமான் தலைமை முஃப்தி அஷ்ஷெய்க்  அஹ்மத் பின் ஹமத் அல் கலீலி அவர்களின் அழைப்பின் பேரில் இலங்கைக்கான ஒமான் நாட்டுத் தூதுவர் அஹ்மத் பின் அலீ அல் ராஷிதி அவர்களின் சுமார் ஆறு மாதங்களின் அயராத முயற்சியின் பயனாக மேற்படி விஜயம் ஒழுங்கு செய்யப்பட்டது.
இவ்விஜயத்தின் போது, ஒமான் சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் கலாநிதி முஹம்மது பின் சயீத் அல்-மஃமரி, காபூல் கலாச்சார மற்றும் அறிவியல் நிலையத்தின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் ஹபீப் பின் முஹம்மத் அர் ரியாமீ, உதவித் தலைமை முஃப்தி கலாநிதி  அஷ்ஷெய்க் கஹ்லான் பின் நப்ஹான் அல் கரூஸி, ஃபத்வாப் பிரிவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் அஹ்மத் பின் ஸுஊத் அல் ஸியாபி, முன்னாள் உயர்நீதிமன்றத் தலைவர் கலாநிதி அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் பின் ராஷித் அல் ஸியாபி ஆகியோரைச் சந்தித்து பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் அவர்களுடனான சந்திப்பு மிகவும் ஆரோக்கியமானதாக அமைந்தது.
எதிர்காலத்தில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில் சமய, சமூக, கல்வி மேம்பாட்டு திட்டங்களுக்குத் தன்னாலான ஒத்துழைப்புகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
குறிப்பாக இரு நாடுகளுக்கு இடையே உள்ள இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தல் மற்றும் மேம்படுத்தல் தொடர்பாக கருத்துப்பரிமாறப்பட்டதுடன், பரஸ்பர புரிந்துணர்வுத் திட்டங்களில் இரு தரப்பு அனுபவங்களை பரிமாறிக்கொள்வது குறித்தும் ஆராயப்பட்டது.
அத்துடன், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியடப்பட்ட தமிழ், சிங்கள அல் குர்ஆன் மொழிபெயர்ப்புகள் பற்றிய அறிமுகமும் செய்யப்பட்டது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...