பாகிஸ்தானின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் சபாநாயகருடன் சந்திப்பு!

Date:

பாகிஸ்தானின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாஹீமுல் அஸீஸ் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பில் பரஸ்பர நலன்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படதுடன் இரு நாடுகளுக்கும் இடையில் நிலவி வரும் உறுதியான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கிடையில் சமய ரீதியான சுற்றுலாத் துறையை விருத்தி செய்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான நாடாளுமன்ற நட்புறவுச் சங்கங்களின் நடவடிக்கைகள் உள்ளிட்ட இரு தரப்பு உறவுகளை விருத்தி செய்வதற்கான எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இந்த சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் பாகிஸ்தானின் பிரதி உயர்ஸ்தானிகர் வாஜித் ஹஸன் ஹஷ்மி ஆகியோரும் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...