‘Visit Saudi’: சவூதி அரேபியாவில் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்குக்கான இணைய வழிகாட்டி

Date:

காலித் ரிஸ்வான்

சவூதி சுற்றுலா ஆணையத்தால் ‘Visit Saudi’ என்ற ஒரு இணையத்தளம் துவங்கி வைக்கப்பட்டுள்ளது.

இத்தளமானது சவூதி அரேபியாவில் உள்ள சுற்றுலா மற்றும் பொழுதுபோக்குத் தளங்கள், உணவகங்கள், மால்கள், பாரம்பரிய சந்தைகள், ஹோட்டல்கள், கடற்கரைகள், அருங்காட்சியகங்கள் மற்றும் பூங்காக்கள் பற்றிய விரிவான வழிகாட்டியை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளது.

புகைப்படங்கள் மற்றும் தேவையான இணைய லிங்க்கள் (Links), போன்றவற்றை உள்ளடக்கிய ‘விசிட் சவூதி’ இணையத்தளமானது, சவூதி நோக்கி வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆர்வமுள்ள பல அம்சங்களை நோக்கி வழிகாட்டுகிறது.

ஹோட்டல் மற்றும் விமானச் சீட்டு முன்பதிவுகள், சவூதியின் அனைத்து நகரங்களிலும் கலாச்சார, பொழுதுபோக்கு, சமூக மற்றும் பருவகால நிகழ்வுகளுக்கான புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டி, சுற்றுலாத் தளங்களுக்கான வழிகாட்டல் வரைபடங்கள், உதவிக்குறிப்புகள் மற்றும் அறிவுறுத்தல்கள் போன்ற அனைத்தையும் இத்தளமானது கொண்டுள்ளது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இத்தளத்தினூடாக சவூதி அரேபியாவிற்குள் நுழைய சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் மற்றும் பெற்றுக்கொள்ளலாம்.

அத்துடன், இவ்விணையத்தளமானது ராஜ்யத்தில் உள்ள அழகான இயற்கை பன்முகத்தன்மை, வளமான கலாச்சார வேறுபாடு மற்றும் அற்புதமான நினைவுச்சின்னங்களையும் எனுத்துக்காட்டுவதாக அமைகிறது.

இவ்வறான முயற்சிகள் அனைத்தும் சவூதி அரேபியாவின் சுற்றுலாத்துறையினை மேம்படுத்துவதற்கும், அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதற்குமான ஏற்பாடுகளாகவே இருக்கின்றன.

உலகின் முக்கிய சுற்றுலாத்தளங்களில் ஒன்றாக அண்மைய நாட்களில் சவூதி அரேபியா மாறி மக்களின் கவனத்தை ஈர்த்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பின்வரும் link இன் மூலம் Visit Saudi தளத்தை அணுக முடியும்: https://www.visitsaudi.com/ar/calendar.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...