பொது மக்களுக்கு ஜனாதிபதி செயலகத்தின் அவசர அறிவிப்பு

Date:

ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றி வருவதாக கூறி பொது மக்களை ஏமாற்றும் நபர்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலீட்டாளர்கள், வேலை தேடுபவர்கள் மற்றும் வீசா விண்ணப்பதாரர்களை இலக்கு வைத்து இந்த மோசடிகள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் பதவிகளை வகிப்பதாகக் கூறி போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து மோசடியான முறையில் பணத்தைப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

அவ்வாறான நபர்கள் தொடர்பில் 0715308032 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரசாத் செனரத்திடம் அறிவிக்குமாறு ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...