‘அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம்” அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு!

Date:

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய, அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் முஸ்லிம் மக்களுக்காக அளப்பரிய சேவையாற்றிய தலைசிறந்த அரசியல்வாதியான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் M.H.M.அஷ்ரப் ஆற்றிய  சேவைகளை கௌரவிக்கும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக “அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம்” ஒன்றை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

M.H.M.அஷ்ரபின் 24 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற உறுப்பினர் H.M.M.ஹரீஸ்  மற்றும் முஸ்லிம் சமூகத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க, M.H.M.அஷ்ரபின் பிறந்த ஊரான கல்முனையில் இந்த நினைவு அருங்காட்சியகம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்திற்காக 25 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி, அதற்கான நிர்மாணப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்குமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

7 இலட்சம் லிட்ரோ எரிவாயு நாளைய தினம் சந்தைக்கு

7 இலட்சம் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் நாளைய தினம் (27) சந்தைக்கு...

வங்கக்கடலில் உருவாகும் சூறாவளி; பல பகுதிகளில் 100 மி.மீ மழைவீழ்ச்சி

வங்காள விரிகுடாவை அண்மித்ததாக காணப்படும் குறைந்த தாழமுக்கத்தினால் இலங்கைக்கு நேரடி பாதிப்புகள்...

மன்னிப்பு கேட்ட முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம் பௌஷி

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம் பௌஷி அரச பத்திரிகை ஊடாக பொதுமன்னிப்பு அறிவித்தலை...

வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்தம் – மழை நீடிக்கும் சாத்தியம்

வங்காள விரிகுடாவின் வட அந்தமான் மற்றும் அதனை அண்மித்த பகுதியில் குறைந்த...