வங்கக்கடலில் உருவாகும் சூறாவளி; பல பகுதிகளில் 100 மி.மீ மழைவீழ்ச்சி

Date:

வங்காள விரிகுடாவை அண்மித்ததாக காணப்படும் குறைந்த தாழமுக்கத்தினால் இலங்கைக்கு நேரடி பாதிப்புகள் இல்லாத போதிலும் அதன் தாக்கம் காரணமாக நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழை நிலைமை அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பொதுமக்கள் கூடுதல் அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்றைய தினம் (25) குறித்த குறைந்த தாழமுக்கம் ஆழமான தாழமுக்கமாக விருத்தியடைந்துள்ளது. அத்துடன் தாழமுக்கம் இந்தியாவை நோக்கி நகர்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் மேல், சப்ரகமுவ, தென், வடமேல், மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் இடைக்கிடையே பலத்த மழை பெய்யும். பல இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.

அத்துடன் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் காற்றானது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசும்.

மத்திய மலைநாட்டில் மண்சரிவு அறிகுறிகள் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் ராஜாங்கனை உள்ளிட்ட பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதால் தாழ் நிலப் பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படக்கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

7 இலட்சம் லிட்ரோ எரிவாயு நாளைய தினம் சந்தைக்கு

7 இலட்சம் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் நாளைய தினம் (27) சந்தைக்கு...

மன்னிப்பு கேட்ட முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம் பௌஷி

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம் பௌஷி அரச பத்திரிகை ஊடாக பொதுமன்னிப்பு அறிவித்தலை...

வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்தம் – மழை நீடிக்கும் சாத்தியம்

வங்காள விரிகுடாவின் வட அந்தமான் மற்றும் அதனை அண்மித்த பகுதியில் குறைந்த...

அமெரிக்க செனட் வேட்பாளர் அப்துல் அல்-சயீத் தனக்கு வைக்கப்பட்ட ‘பொறியை’ சாதகமாக மாற்றிய தருணம்.

எதிர்பாராத ஒரு திருப்பமாக, மிச்சிகன் மாநிலத்தில் அமெரிக்க செனட் சபைக்கான(Senate) ஜனநாயகக்...