ஹிஜ்ரி 1445 துல் கஹ்தா மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு!

Date:

ஹிஜ்ரி 1445 துல் கஹ்தா மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று மே 08 ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

இதன்போது எப்பாகத்திலும் தலைப் பிறை தென்படாததால் இலங்கை வாழ் மக்கள் புனித ஷவ்வால் மாதத்தை நாளை வியாழக்கிழமை 09ஆம் திகதி 30ஆக பூர்த்தி செய்து நாளை மஹ்ரிபு தொழுகையுடன் புனித துல்கஹ்தா மாதம் ஆரம்பமாகின்றது என கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக் குழுத் தலைவர் கலீபதுல் குலபா மௌலவி எம்.பி.எம்.ஹிஷாம் பத்தாஹி உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.

கொழும்பு பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் அதன் தலைவர் தாஹிர் ரஷீன் தலைமையில் இடம்பெற்ற மாநாட்டில் பெரிய பள்ளிவாவசலின் பிறைக்கு குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையின் மொகமட் மெளலவி உள்ளிட்ட, பிரதி நிதிகள், கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் அலா அஹமட் உள்ளிட்ட அதிகாரிகள், வளிமண்டவியல் திணைக்கள சிரேஷ்ட அதிகாரி மொகமட் சாலிகீன் , ஸ்ரீ லங்கா ஷரீஆ கவுன்சில் பிரதிநிதிகள், ஏனைய பள்ளிவாசல்கள், தரீக்காக்கள், ஸாவியாக்ளின் பிரதிநிதிகள் மேமன் சங்க பிரதி நிதிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

எஸ்.எம்.ஜாவித் 

Popular

More like this
Related

வியட்நாம் ஜனாதிபதி இலங்கை வருகை: பாராளுமன்றத்தில் விசேட உரை

வியட்நாம் சோசலிச குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின்...

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன அவரது வீட்டில் சடலமாக மீட்பு.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் பலத்த மழை!

நாட்டின் தற்போதைய மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும்...

தரம் 6 பாடசாலை அனுமதி: இரண்டாம் சுற்று மேன்முறையீடுகள் நாளை முதல் ஆரம்பம்!

2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில், 2026...