‘காசாவில் இன ஒழிப்பை நிறுத்து’: தெவட்டகஹ பள்ளிவாசல் முன்னால் ஆர்ப்பாட்டம்

Date:

காசா இனப்படுகொலையை உடனடியாக நிறுத்துமாறும்,  நிரந்தர போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் கொழும்பு-7 தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு முன் இன்று (31)  ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

இந்த போராட்டத்தை பலஸ்தீனத்துடனான ஒற்றுமைக்கான இலங்கை சங்கம், சிவில் அமைப்பு மற்றும் சோசலிச மற்றும் இளைஞர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

200 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள பலஸ்தீன மக்கள் மீது தாக்குதலை தொடுத்து வருகிறது.

இதில் 36 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். 75% பேர் குழந்தைகள் என பலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

எனவே உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்தத் தொடங்கியுள்ளன.

Popular

More like this
Related

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை!

பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்...