ரஃபா மீது தாக்குதல் மேற்கொண்டால் ஹமாசின் நிலையை வலுப்படுத்தும்: அமெரிக்கா

Date:

 ரஃபா மீது இஸ்ரேல் பாரிய நடவடிக்கையை மேற்கொண்டால் அது ஹமாஸ் அமைப்பிற்கான மூலோபாய  வெற்றியாக மாறும் என அமெரிக்கா வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு பேச்சாளர் ஜோன் கேர்பி  தெரிவித்துள்ளார்.

ரஃபா மீதான எந்த பாரிய நடவடிக்கையும் பேச்சுவார்த்தை மேசையில் ஹமாசின் நிலையை வலுப்படுத்தும் இஸ்ரேலின் நிலையை வலுப்படுத்தாது என்பதே எங்களின் நிலைப்பாடு என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் தாக்குதலில் ரஃபா அதிகளவு பொதுமக்கள் உயிரிழந்தால் இஸ்ரேல் பற்றிய ஹமாசின் திரிபுபடுத்தப்பட்ட கதைகளிற்கு மேலும் பல விடயங்கள் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்  காசா நகரமான ரஃபா மீது பாரிய தாக்குதலை மேற்கொண்டால்  இஸ்ரேலிற்கு சில ஆயுதங்களை வழங்குவதை நிறுத்துவோம்  எனஅமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் எச்சரித்துள்ளார்.

அவர்கள் ரஃபாவிற்குள் நுழைந்தால் நான் ரஃபா விடயத்தில் வரலாற்று ரீதியாக பயன்படுத்தப்படும் சில ஆயுதங்களை வழங்க தயாரில்லை என பைடன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இஸ்ரேல் பாதுகாப்பாகயிருப்பதை தொடர்ந்தும் உறுதிசெய்வேன் எனவும் பைடன் தெரிவித்துள்ளார்.

நாங்கள் ஆட்டிலறி எறிகணைகளையும் ஆயுதங்களையும் இஸ்ரேலிற்கு வழங்கமாட்டோம் எனவும் பைடன் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளுக்கு நீர் வெட்டு !

அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளில் இன்று...

ஹிரோஷிமா தினம்: மனித வரலாற்றின் ஆறாத வடுவும் அணுஆயுதங்களற்ற உலகத்திற்கான குரலும்

இரண்டாம் உலகப் போரின் உச்சக்கட்டம். 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி,...

பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை விடுமுறை: கல்வி அமைச்சு!

2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ்...

கொழும்பில் சர்வதேச பட்டத் திருவிழா 2026!

கொழும்பில் எதிர்வரும் ஓகஸ்ட் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள...