மௌலவி என்பதற்காக மட்டும் ஒருவரை பின்தொடர்வது ஆபத்தானது; ஈஸ்டர் ஞாயிறு தீர்ப்பு தரும் பாடங்களில் ஒன்று.

Date:

2019 Easter Attack தொடர்பான வழக்கில் நேற்று குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டவர்களில் முக்கியமான ஒருவர் நவ்பர் மௌலவி (Mohamed Ibrahim Mohamed Naufer).

இந்த மனிதரைப் பற்றி Easter Attack நடந்த காலத்திலிருந்தே நிறைய பேசப்பட்டாலும், சாதாரண மக்களுக்கு Zahran Hashim தெரிந்த அளவுக்கு இவரைத் தெரியாது.

இந்த வழக்கே சாதாரணமான ஒரு வழக்கு இல்லை. 23,270 குற்றச்சாட்டுகள், 2,309 அரச தரப்பு சாட்சிகள், கிட்டத்தட்ட ஐந்து வருட விசாரணை. இறுதியில் நவ்பர் மௌலவி உட்பட 15 பேர் குற்றவாளிகள் என Colombo High Court Trial-at-Bar நேற்று தீர்ப்பளித்திருக்கிறது.

நவ்பர் மௌலவி தொடர்பில் எனக்கு முக்கியமாகத் தோன்றும் விடயம் என்னவென்றால், Easter Attack என்றவுடன் நம்முடைய முழுக் கவனமும் Zahran என்ற ஒரு மனிதனிலேயே நின்றுவிட்டது.

ஆனால் இவ்வாறான பயங்கரவாதம் ஒரே நாளில் ஒருவனுடைய மூளைக்குள் தோன்றி, அடுத்த நாள் அவன் Bomb கட்டிக்கொண்டு போய் வெடிப்பதல்ல. அதற்குப் பின்னால் ஒரு Ideology உருவாகிறது.

அந்த Ideology பேசப்படுகிறது, பரப்பப்படுகிறது, மனிதர்களின் சிந்தனை மாற்றப்படுகிறது. நவ்பர் மௌலவியை Zahran உடன் தொடர்புடைய குழுவின் ஆன்மீகத் தலைவர் என நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான செய்திகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவருடைய CID வாக்குமூலம் தன்னிச்சையாக வழங்கப்பட்டதா என்பது தொடர்பாக தனியாக விசாரணை நடத்திய நீதிமன்றம், அது voluntarily வழங்கப்பட்டதாகவும் தீர்மானித்திருந்தது.

ஆனால் இங்கே இன்னொரு பக்கத்தையும் சொல்ல வேண்டும். நவ்பர் மௌலவி நீதிமன்றத்தில் தனது Defence Statement கொடுத்தபோது இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்தார்.

Zahran தனது உறவுப் பெண்ணை திருமணம் செய்ததன் மூலம் அவரை அறிந்ததாகவும், 2007 முதல் 2017 வரை Zahran உடன் தனக்கு தொடர்பே இல்லை என்றும், Easter Attack உடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் கூறியிருந்தார். CID பதிவு செய்த confession தன்னுடைய உண்மையான வாக்குமூலம் அல்ல என்றும் அவர் வாதிட்டார்.

ஆனால் பல வருடங்கள் நீண்ட Evidence, Witnesses, Confessions, Documents எல்லாவற்றையும் விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட Trial-at-Bar நேற்று அவரை குற்றவாளியாக கண்டிருக்கிறது. அதனால் இப்போது இது வெறும் Social Media allegation அல்ல; நீதிமன்றத் தீர்ப்பு என்ற இடத்திற்கு வந்திருக்கிறது.

இதில் நம்முடைய இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய மிகப்பெரிய பாடமும் இருக்கிறது. ஒருவர் பெயருக்குப் பின்னால் “மௌலவி” இருக்கிறது என்பதற்காக, நீண்ட தாடி வைத்திருக்கிறார் என்பதற்காக, அரபியில் வசனங்களையும் ஹதீஸ்களையும் பேசுகிறார் என்பதற்காக அவர் சொல்வதெல்லாம் மார்க்கம் என்று நம்பிவிடாதீர்கள். யார் என்ன சொன்னாலும் கேள்வி கேளுங்கள்.

அவர் காட்டும் ஆதாரம் என்ன என்று பாருங்கள். அவர் குர்ஆன் வசனத்தை எந்த Context-ல் பயன்படுத்துகிறார் என்று பாருங்கள்.

மற்ற மனிதர்கள் மீது வெறுப்பை வளர்க்கிறாரா, உலகத்திலிருந்து உங்களை தனிமைப்படுத்துகிறாரா, தன்னை அல்லது தனது சிறிய குழுவை மட்டும் உண்மையான முஸ்லிம்களாக காட்டுகிறாரா என்பதையும் கவனியுங்கள்.

ஏனென்றால் இப்படிப்பட்டவர்களிடம் ஈர்க்கப்பட்ட பலரும் ஆரம்பத்தில் Terrorist ஆக வேண்டும் என்று சென்ற இளைஞர்கள் அல்ல.

மார்க்கத்தை இன்னும் சரியாகப் பின்பற்ற வேண்டும், அல்லாஹ்வுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற உணர்வோடு சென்றவர்களாகவும் இருக்கலாம். அந்த உணர்ச்சியை ஒருவர் தவறான பாதைக்கு திருப்பிவிட்டால் கடைசியில் அழிவது அந்தப் மௌலவியுடைய வாழ்க்கை மட்டும் அல்ல.

அவரை நம்பிப் பின்னால் சென்ற இளைஞனுடைய படிப்பு, வேலை, குடும்பம், சுதந்திரம், மொத்த எதிர்காலமும் சேர்ந்து அழிந்துவிடலாம். Easter Attack தொடர்பான இந்த வழக்கு இளைஞர்களுக்கு அந்த அபாயத்தை நினைவுபடுத்தும் மிகப்பெரிய பாடமாக இருக்க வேண்டும்.

மார்க்கத்தில் உணர்ச்சி மட்டும் போதாது. அறிவும் வேண்டும். ஒரு மௌலவியை மதிப்பது வேறு; சிந்திக்கும் பொறுப்பையே அவரிடம் ஒப்படைத்துவிடுவது வேறு. அல்லாஹ் நமக்கு அறிவையும் பகுத்தறிவையும் கொடுத்திருக்கிறான். அதை பயன்படுத்துங்கள்.

குறிப்பாக இளைஞர்களே, உங்கள் கோபத்தையும், மார்க்கப் பற்றையும், நீதிக்கான உணர்வையும் யாருடைய அரசியலுக்கோ Extremist ideology-க்கோ எரிபொருளாக பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். ஒரு தவறான மனிதரை blindly follow செய்த சில வருடங்கள், உங்கள் மொத்த வாழ்க்கையையும் மாற்றிவிடலாம்.

Easter Attack பற்றி பேசும்போது Bomb வெடித்த அந்த ஒரு நாளை மட்டும் விசாரித்தால் இந்தக் கதையை முழுமையாக புரிந்துகொள்ள முடியாது. Zahran எப்படி உருவானார்? அவரைச் சுற்றி இப்படியான சிந்தனை எப்படி வளர்ந்தது? யார் யாருக்கு என்ன தெரிந்திருந்தது? கிடைத்த Intelligence ஏன் சரியான நேரத்தில் செயல்படுத்தப்படவில்லை? இந்த வலையமைப்பு எவ்வளவு காலமாக வளர்ந்தது? இவை எல்லாவற்றிற்கும் பதில் கிடைக்கும்போதுதான் Easter Attack பற்றிய முழுமையான உண்மை வெளிவந்ததாக சொல்ல முடியும்.

2019 April 21 அன்று உயிரிழந்த நூற்றுக்கணக்கான அப்பாவி மனிதர்களுக்கு நாம் செய்யக்கூடிய குறைந்தபட்ச நீதி, குற்றம் செய்தவர்களை தண்டிப்பது மட்டுமல்ல. இப்படியொரு பயங்கரம் மீண்டும் இந்த நாட்டில் உருவாகாமல் இருக்க அது எப்படி உருவானது என்பதைப் புரிந்துகொள்வதும், இன்னொரு தலைமுறை இளைஞர்கள் இப்படியானவர்களிடம் சிக்காமல் பார்த்துக்கொள்வதும் தான்.

நன்றி- Niwas Niwasdeen [Facebook]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

பெய்து வரும் கனமழையால் கிரகரி வாவியின் நீர்மட்டம் உயர்வு!

நுவரெலியா பகுதியில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக கிரகரி வாவியின் (Gregory...

அரச ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளுக்கு தீர்வு காண நடவடிக்கை – பிரதமர்!

அரச அதிகாரிகள் மற்றும் ஓய்வூதியர்களின் ஊதிய மற்றும் ஓய்வூதியக் கொள்கையை நிலையான...

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

களு கங்கையின் குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய...

டிரம்ப்பிற்கு பலத்த அடி! சிஎன்என் உள்ளிட்ட ஊடகங்களின் தடையை நீக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சிஎன்என் (CNN), எம்.எஸ் நவ் (MS...