இஸ்ரேலின் டெல் அவிவ் மீது நேற்றிரவு ஹமாஸ் அமைப்பு ரொக்கெட்களை வீசி தாக்குதல் நடத்திய நிலையில், இஸ்ரேல் இராணுவம் இதற்கு பதிலடி கொடுத்திருக்கிறது. இந்தத் தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் சமீபத்தில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் ஐ. நா பணியாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர்.
எனவே உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்த தொடங்கின. இது நாள் வரை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா கூட, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
இந்நிலையில் நேற்றிரவு இஸ்ரேலின் டெல் அவிவ் மீது ஹமாஸ் அமைப்பு ராக்கெட்களை வீசி தாக்குதலை நடத்தியிருக்கிறது. எனவே இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், 40 பேர் பலியாகியுள்ளனர்.
ராஃபா எல்லையில் தஞ்சமடைந்துள்ளவர்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த தாக்குதலுக்கு பலஸ்தீன அரசு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
200 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள பலஸ்தீன மக்கள் மீது தாக்குதலை தொடுத்து வருகிறது. இதில் 35 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். 75% பேர் குழந்தைகள் என பலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.