ஹெலிக்கொப்டர் விபத்தில் சிக்கிய ஈரான் ஜானதிபதி இப்ராஹிம் ரைசி மரணம்: ஹெலிக்கொப்டரில் பயணித்த எல்லோரும் பலி!

Date:

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன..

நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் யாரும் பிழைக்கவில்லை என்று ஈரான் அரசு தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

இஸ்ரேல் போருக்கு இடையே திடீரென ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்கு உள்ளனாது.

விபத்து நடந்ததாக கூறப்படும் இடத்தை டிரோன் ஒன்று உறுதி செய்த நிலையில் அந்த பகுதியில் செய்யப்பட்ட சோதனையில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தது உறுதி ஆனது.

ஹெலிகாப்டரில் ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன், ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மற்றும் பிற அதிகாரிகள் மற்றும் பாதுகாவலர்கள் இருந்ததாக அரசு தெரிவித்துள்ளது. இவர்கள் எல்லோரையும் விபத்தில் பலியாகி உள்ளனர்.

அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் உடன் இணைந்து இருநாட்டு முயற்சியில் கட்டப்பட்டஒரு அணையைத் திறப்பதற்காக அஜர்பைஜானுடனான ஈரானின் எல்லைக்கு ரைசி சென்று இருந்தார்.

அங்கிருந்து திரும்பி வந்த போது இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. ஹெலிகாப்டரில் பயணித்த ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் ஆகியோர் மரணம் அடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.என்ன நடந்தது?: ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் உள்ள வர்சகான் மற்றும் ஜோல்பா நகரங்களுக்கு இடையே, தெளிவற்ற வானிலை காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது அல்லது அவசரமாக தரையிறங்கியது. ஆரம்பத்தில், உள்துறை மந்திரி அஹ்மத் வஹிடி, மோசமான வானிலை மற்றும் பனிமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் கடுமையாக தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றார். ஆனால் இப்போது ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளதாக கூறப்படுகிறது.

Popular

More like this
Related

ஹஜ் பயண முகவர் சங்கத்தின் தலைவராக அல்ஹாஜ் அம்ஜடீன் தெரிவு

2025 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஹஜ் முகவர் சங்கத்தின் தலைவராக அம்ஜா...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (17) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர்...

தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க முடியும்: சுங்கத் திணைக்களம்

நாட்டில் நாணயக் கடிதங்களை திறந்து உற்பத்தி செய்யப்பட்ட நாடு அல்லாத வேறு...