இன்று இரவு கடும் மின்னல் தாக்கம் ஏற்படும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

Date:

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (09) கடும் மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதன்படி, மேல், சப்ரகமுவ, தெற்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும்,மாத்தளை, முல்லைத்தீவு மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் மாலை மற்றும் இரவு வேளைகளில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக திணைக்களம் குறிப்பிடுகின்றது.

இடி, மின்னலுடனான வானிலை நிலவும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக காற்று வீசும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இந்த வானிலை அறிவிப்பு இன்றிரவு 11.30 வரை செலுப்படியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிடுகின்றது.

Popular

More like this
Related

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை!

பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்...

2026 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாளை

2026 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை இடம்பெறவுள்ளது....

பல பிரதேசங்களில் மழைக்கு வாய்ப்பு!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...