இந்தியாவின் முதலாவது ஹஜ் யாத்திரிகர்கள் குழு புனித மக்கா நோக்கி பயணம்!

Date:

இந்தியாவில் இருந்து 2024 ஆம் ஆண்டிற்கான முதலாவது ஹஜ் யாத்திரிகர்கள் குழு இன்று (09) புனித மக்கா நோக்கி பயணித்தனர். யாத்திரிகர்கள்  மதீனா விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீரில் இருந்து முதல் குழு  2 விமானங்கள் மூலம் சவூதி அரேபியாவுக்குப் புறப்பட்டது.

இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று ஹஜ் புனிதப் பயணம்  மேற்கொள்வது.  இந்த நிலையில்,  இந்தாண்டு ஜம்மு-காஷ்மில் இருந்து 7,008 பயணிகள் சவூதி அரேபியாவில் ஹஜ் புனித பயணம் மேற்கொள்வார்கள் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து ஸ்ரீநகரின் பெமினா புறநகரில் அமைந்துள்ள ஹஜ் இல்லத்திற்கு அதிகாலை முதலே பயணிகள் வரத் தொடங்கினர்.

தொடர்ந்து,  ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து  தலா 321 பயணிகளை ஏற்றிக் கொண்டு இரண்டு விமானங்கள் இன்று புறப்பட்டன.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...