மது பாவனையை கட்டுப்படுத்தியதால் மோதல்கள் குறைந்தன: ஆய்வில் தகவல்

Date:

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகையின் போது மது அருந்துவதைக் கட்டுப்படுத்தியதன் விளைவாக, பண்டிகைக் காலங்களில் மது பாவனையுடன் தொடர்புடைய மோதல்கள் மற்றும் பிரச்சினை சம்பவங்களில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (Alcohol & Drug Information Centre), நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

இந்த கணக்கெடுப்பு இலங்கையின் ஒன்பது மாகாணங்களிலும் 415 நபர்களின் மாதிரியை கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், 46.2 விகிதம் (n = 192) பெண்கள் மற்றும் 53.7விகிதம் (n = 223) ஆண்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 70.8 விகிதமாக இருந்த பெரும்பாலான கணக்கெடுப்பில் பங்கேற்பாளர்கள், முந்தைய ஆண்டை விட இந்த ஆண்டு பண்ணடிகைக் காலத்தில் மது அருந்துதல் தொடர்பான மோதல்கள் மற்றும் பிரச்சனைகள் குறைவு என தெரிவித்துள்ளனர்.

மேலும், பங்கேற்பாளர்களில் இருந்து, 64வீதமான பேர், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது மது அருந்துதல் குறைந்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

பல பதில்களை வழங்குவதற்கான வாய்ப்புடன் மது அருந்துதல் குறைவதற்கு பங்களிக்கும் காரணிகள் குறித்து கணக்கெடுப்பில் பங்கேற்பாளர்களிடம் கேட்கப்பட்டது.

கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 71.5விகிதம் பேர், மதுபானங்களின் விலை உயர்வும் இதற்கு ஒரு காரணம் என்று கூறியுள்ளனர்.

கூடுதலாக, குடும்ப உறுப்பினர்களின் எதிர்ப்பு, உடல்நலப் பிரச்சினைகள், மதுபானம் அருந்தும் நோக்கம் இல்லாதது என்ற எண்ணம் ஆகியவையும் மது அருந்துவதைக் குறைப்பதற்கான காரணங்களாக முன்வைக்கப்படுகின்றன.

இதற்கிடையில், சமூக ஊடகங்களில், குறிப்பாக கொண்டாட்டங்களின் போது மது அல்லது அது தொடர்பான விளம்பரம் இருப்பது குறித்து ஆய்வின் போது வினவப்பட்டது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் உடல் மீட்பு: இலங்கை விஜயத்தை நினைவுகூர்ந்த ஜனாதிபதி ரணில்

 விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளிவிவகார அமைச்சர் எச்.அமீர்...

பொது மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களமானது அடுத்த 36 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் புதிய வானிலை அறிவிப்பை...

ஈரானின் புதிய ஜனாதிபதியாக மொஹமட் முக்பர்..!

ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நேற்றைய தினம் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில்...

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு...