புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ள பாடசாலை மாணவர்கள்!

Date:

13 முதல் 15 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாக சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாளை (31ஆம் திகதி) அனுஷ்டிக்கப்படும் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கொழும்பில் நேற்று (29ஆம் திகதி) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பதின்ம வயதினரிடையே புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நிபுணர் தெரிவித்துள்ளார்.

இந்த கணக்கெடுப்பில், 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களில் 5.7% பேர் ஒரு முறையாவது புகைபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த மாணவர்களில் 3.7% பேர் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த சிறார்கள் பெரும்பாலும் இ-சிகரெட்டைப் பயன்படுத்திய பின்னர் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர்.

இ-சிகரெட்டுக்கு அடிமையாகும் இவர்கள் மிக விரைவாக சிகரெட்டுக்கு அடிமையாகி விடுகின்றனர் என நிபுணர் தெரிவித்துள்ளார்.

பெற்றோர்கள் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்தால் குழந்தைகளுக்கு சுவாச நோய்கள் மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை!

பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்...