நாட்டில் கணனி அறிவாற்றல் வீதம் அதிகரிப்பு!

Date:

நாட்டில் கணனி அறிவாற்றல் 39 வீதமாக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு கணனி கல்வியறிவு கணக்கெடுப்பு அறிக்கையின்படி, இலங்கையில் 5 முதல் 69 வயதுக்கு இடைப்பட்ட  ஐவரில் இருவர் கணினி அறிவு பெற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐவரில் மூவருக்கு டிஜிட்டல் கல்வியறிவு உள்ளதுடன் இது 63.5 வீதம் எனவும் மக்கள் தொகை கணக்கெடுப்பு துறை தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டளவில், கணினி கல்வியறிவு 4.7 வீதமாக அதிகரித்துள்ளதுடன்  நகர்ப்புறங்களில் கணினி கல்வியறிவு 52.9 வீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல்மாகாணத்தில் அதிக கணினி அறிவைக் கொண்ட மக்கள் உள்ளதுடன், கிழக்கு மாகாணத்தில் மிகக் குறைந்த கணினி அறிவைக் கொண்ட மக்கள் இருப்பதாக தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை!

பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்...