மல்வானை நகரம் மூழ்கியது:கொழும்பு உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்

Date:

களனி கங்கை பெருக்கெடுத்துள்ள நிலையில், மல்வானை நகரம் நீரில் மூழ்கியுள்ளது.

வர்த்தக நிலையங்கள், வீடுகளுக்குள் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதியின் புவக்பிட்டிய பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பல கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது,

அத்துடன், கொழும்பு – அவிசாவளை வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டிருந்த நிலையில், கனரக வாகனங்கள் மாத்திரம் செல்ல முடிவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை 7 மணி நிலவரப்படி எஹலியகொடவில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, குறித்த பகுதியில் 427.5 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும், இதே காலப்பகுதியில் இங்கிரிய ஹல்வத்துர தோட்டத்தில் 348.5 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்குரஸ்ஸ பகுதியில் 283.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் அதேவேளை சாலாவ பிரதேசத்தில் 280.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

இதனிடையே, கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

Popular

More like this
Related

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை!

பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்...