புதிய கடவுச் சீட்டு பெறவுள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Date:

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது தெளிவான தேசிய அடையாள அட்டைகளை சமர்ப்பிக்குமாறு பொதுமக்களிடம் குடிவரவு திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

பழைய தேசிய அடையாள அட்டைகளை கொண்டுள்ள விண்ணப்பதாரர்கள் புதிய தேசிய அடையாள அட்டையுடன் தமது பணிகளை மேற்கொள்ள வரும் போது கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வது இலகுவாக இருக்கும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள அடையாள அட்டை பத்து வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டிருந்தால் அப்போதைய புகைப்படத்திற்கும் இப்போதைய புகைப்படத்திற்கும் மாற்றங்கள் நிறையவே உண்டு எனத் தெரிவித்துள்ளார்.

அதில் பல சிக்கல்கள் ஏற்படும் என்பதனால்தான் தாம் தெளிவான அடையாள அட்டைகளை கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டினை பெறவுள்ள நபர் தன்னை உறுதிப்படுத்திக்கொள்ள தற்போது தேசிய அடையாள அட்டை பாவிக்கப்படுவதாகவும், ஆனால் 2025 ஆம் ஆண்டுக்கு பின்னர் கைவிரல் ரேகைகள் தான் முதலிடம் பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மாகாண சபைத் தேர்தல் இந்த வருடத்திற்குள் நிச்சயமாக நடத்தப்படும்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாட்டை விஞ்ஞான...

களு கங்கையை அண்மித்த பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை

களு கங்கை வடிநிலப்பகுதியில் உள்ள நீர்மானி நிலையங்களின் நீர்மட்ட ஆய்வுகளின்படி, அடுத்த...

மோசமான வானிலை; உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

நாடு முழுவதும் உள்ள பல மாவட்டங்களைப் பாதித்த பேரிடர் சூழ்நிலையின் விளைவாக,...

சர்வதேச கொடுக்கல் வாங்கல்களை எளிதாக்கும் PayPal இன்று முதல் இலங்கையிலும் அறிமுகம்

டிஜிட்டல் பொருளாதாரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், PayPal பணப்பரிமாற்ற முறை இன்று (15)...