நாடாளுமன்றிற்கு எடுத்துச் செல்லப்படும் சம்பந்தனின் பூதவுடல்!

Date:

மறைந்த  ஆர். சம்பந்தனின் பூதவுடல் எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்ற வளாகத்துக்கு அஞ்சலிக்காக வைக்கப்படும் என நாடாளுமன்ற விவகாரக் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் புதன்கிழமை பிற்பகல் 2.00மணிமுதல் மாலை 04.00மணிவரை பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிக் கிரியைகள் திருகோணமலையில் நடைபெறவுள்ளதுடன், அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான அனைத்து பணிப்புரைகளையும் பிரதமர் தினேஷ் குணவர்தன உரிய அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.

அன்னாரது பூதவுடல் பொரள்ளையிலுள்ள தனியார் மலர்சாலையொன்றில் மக்கள் அஞ்சலிக்காக நாளை(02) வைக்கப்படவுள்ளது.

 

Popular

More like this
Related

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும்...

இலங்கையின் பேசப்படாத தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள்

-ரிசா யெஹியா சிரேஷ்ட கட்டிடக் கலைஞர். பகுதி-1 இலங்கையில் தேசிய பாதுகாப்பு இன்னும் பெரும்பாலும்...

பொல்பிட்டியவில் காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்களும் மீட்பு!

பொல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரஹேனகம பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு...

மோசமான வானிலை: பரீட்சைகள் குறித்து நாளை விசேட கலந்துரையாடல்!

நிலவும் மோசமான வானிலை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, நடைபெறவுள்ள தரம் 5...