பங்களாதேஷில் உச்சக்கட்ட வன்முறை: நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு

Date:

பங்களாதேஷில் நாடு முழுவதும் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்களை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டாக்காவில் சுமார் 15 நாட்களாக நடைபெற்று வரும் மாணவர் போராட்டத்தை ஒடுக்க அரசு எடுத்த கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது.

 

இதன்போது இடம்பெறும் வன்முறை சம்பவங்களால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு நாட்டில் உள்ள பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கலவரத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்க தொலைக்காட்சிக்கு தீ வைத்ததாகவும், நாட்டில் உள்ள அனைத்து தொலைக்காட்சி செய்தி சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் இணைய இணைப்புகள் மற்றும் தொலைபேசி இணைப்புகள் முடக்கப்பட்டுள்ளன.

 

Popular

More like this
Related

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: 2021 தேர்தலைவிட 17% அதிக வாக்குப்பதிவு!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021-ஐ ஒப்பிடும் போது பகல் 1 மணி...

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ பெயரைப் பயன்படுத்தி நடைபெறும் மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’  நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி பாரிய நிதி மோசடி ஒன்று...