பரவி வரும் இன்புளுவென்சா வைரஸ்: கொவிட் விதிமுறைகளை மீள பேணுமாறு சுகாதார அதிகாரிகள் கோரிக்கை

Date:

நாட்டில்  இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சல் வேகமாக அதிகரித்து வருவதால் கொவிட் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவிக்கையில்,

குறிப்பாக சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைவாகவுள்ளவர்கள்  போன்றவர்கள் கொவிட் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

“சிறுவர்கள் மற்றும் வயதானவர்கள் முகக் கவசங்களை அணிய வேண்டும், கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும், பொது போக்குவரத்து உள்ளிட்ட சன நெரிசலான இடங்களில் இடைவெளியை பேண வேண்டும்.

பாடசாலைகள், சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் வைரஸ் காய்ச்சல் அதிகளவு பரவுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின்  உடல்நிலையை உன்னிப்பாகக் கண்காணிக்குமாறும், ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் அவர்களைப் பாடசாலைகள் அல்லது குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களுக்கு அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும்.

காய்ச்சல், குளிர், தலைவலி, மூக்கு ஒழுகுதல் அல்லது அடைப்பு, தசை அல்லது உடல் வலி, குமட்டல், சோர்வு, பசியின்மை மற்றும் தொண்டை வலி ஆகியவை இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளாகும் என்றார்.

நாட்டில் இன்ஃப்ளூன்ஸா வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் பாரியளவில் அதிகரித்துள்ளதை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின்  ஊடகப் பேச்சாளர்  வைத்தியர் சம்மில் விஜேசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் சிறிதளவு அதிகரித்துள்ளதோடு, ஒரு சில உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில்  பெரும்பாலானவர்கள் கொவிட் தடுப்பூசி போடாதவர்கள். சில உயிரழப்புகளுக்கு நேரடியாக கொவிட் தொற்று காரணமாக இருக்கவில்லை. ஆனால் பி.சி.ஆர் பரிசோதனையில் கொவிட் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை!

பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்...