சம்பந்தனின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள இந்திய தலைவர்கள்

Date:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தனின் மறைவிற்கு இந்திய அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இலங்கைத் தமிழர் தலைவர் ஆர்.சம்பந்தனின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தம் கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

மேலும் பல தசாப்தகாலமாக எனக்கும் அவருக்கும் இடையில் நடைபெற்ற பல்வேறு சந்திப்புகள் மற்றும் உரையாடல்களை இச்சந்தர்ப்பத்தில் நினைவில் கொள்கின்றேன்.

இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் சமத்துவம், கௌரவம் மற்றும் நீதிக்கான போராட்டத்துக்காக அவர் தனது முழு வாழ்வையும் அர்ப்பணித்திருந்தார். அவரது குடும்பத்தினருக்கும் அபிமானிகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.” என தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, இரா.சம்பந்தனின் மறைவிற்கு தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமியும் தனது இரங்கலினை தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இலங்கை தமிழரின் அடுத்த தலைமுறை பாதுக்காப்பான வாழ்வியலை கட்டமைக்க, ஒரு சரியான அடித்தளத்தை அமைத்த தமிழின தலைவரான அவரது இழப்பு ஈழத் தமிழர் வரலாற்றில் ஈடு செய்ய முடியாத ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாளெல்லாம் குரல் கொடுத்த மாபெரும் அரசியல் ஆளுமையான சம்பந்தனை இழந்து தவிக்கும் அவரது அமைப்பினருக்கும் இலங்கைத் தமிழ் உறவுகளுக்கும் தமிழ்நாட்டு மக்களின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் தெரிவித்தார்.

 

 

Popular

More like this
Related

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும்...

இலங்கையின் பேசப்படாத தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள்

-ரிசா யெஹியா சிரேஷ்ட கட்டிடக் கலைஞர். பகுதி-1 இலங்கையில் தேசிய பாதுகாப்பு இன்னும் பெரும்பாலும்...

பொல்பிட்டியவில் காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்களும் மீட்பு!

பொல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரஹேனகம பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு...

மோசமான வானிலை: பரீட்சைகள் குறித்து நாளை விசேட கலந்துரையாடல்!

நிலவும் மோசமான வானிலை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, நடைபெறவுள்ள தரம் 5...