சர்ச்சைக்குரிய இணையவழி விசா மோசடி : பிரதமர் தலைமையிலான அமைச்சரவைக்கு நீதிமன்றம் அழைப்பாணை

Date:

வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு இணையவழி விசா வழங்குவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எனவும் மற்றும் அது சுற்றுலாத்துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும்  தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

குறித்த மனுவை பாட்டலி சம்பிக்க ரணவக்க  மற்றும் எம்.ஏ.சுமந்திரன்  ஆகியோர் தாக்கல் செய்திருந்தனர்.

இதனடிப்படையில், இந்த மனுவில் பிரதிவாதிகளுக்கு ஒகஸ்ட் இரண்டாம் திகதி நீதிமன்றம் மனுஅனுப்பியுள்ளதுடன் இந்த மனுவின் பிரதிவாதிகளாக பிரதமர் தலைமையிலான அமைச்சரவை குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாட்டு நிறுவனத்திற்கு இணையவழி விசா வழங்குவதில் நேரடியாக தலையிட்ட அமைச்சர்களுக்கு தனித்தனியாக அழைப்பாணைகள் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் ஏனைய அமைச்சர்கள் சார்பில் அமைச்சரவை செயலாளருக்கு அழைப்பாணைகள் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...